Sunday, April 25, 2010

வலைதளம் வடிவமைப்பில் சிறந்து விளங்கும் இலவச மென்பொருள்.

ஒரு சிறந்த வலைதளம் என்றல் இன்று உள்ள அணைத்து உலாவிகளிலும் ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டிருத்தல் வேண்டும். அதற்க்கு டேபிள்(table) உபோயோக படுத்தாமல் டிவ்வை (div ) கொண்டு வடிவமைக்க வேண்டும். குறிப்பாக டிவ் உபோயோகப் படுத்தும்போது குருப் முறையில் வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு டிவ்க்கும் கிளாஸ் அல்லது ஐடி கொடுத்து சி.எஸ்.எஸ் மூலம் முறையான தகவல் தந்து படிவங்களை மெருகேற்றலாம்.


இதற்க்கு தேவையான அகால உயரங்களை அளக்க, தேவையான வண்ணங்களை எடுக்க, ஒரு படத்தில் (image) இருந்து தேவையான பகுதிகளை கேப்சர் முறையில் பிரித்தெடுக்க என அணைத்து வேலைகளையும் ஒரு சிறிய இலவச மென்பொருள் மூலம் பெறலாம். மென்பொருளின் பெயர்: பேடன் மீசெர் டூல்ஸ்.


இந்த டூலின் கொள்ளளவு வெறும் 404 கேபிதான். இதனை தரவிறக்க செய்ய இங்கே சொடுக்கவும்.

மீசெர் டூல்ஸ் சிறப்பு தன்மைகளை பார்ப்போம்1. ஸ்க்ரீன் காப்ட்சர்

இந்த மீசெர் டூல்ஸ் மூலம் ஸ்க்ரீனை பிரிண்ட் செய்யலாம். இதற்க்கு கீபோர்டில் விண்டோஸ் கீ மற்றும் எஸ் கீ அழுத்தவும், இப்போது உங்களுக்கு தேவையான பகுதியை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும். பின்பு எம் எஸ் பெயின்ட் திறந்து  பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளலாம்.2 . கலர் கிராபர்

திரையில் நீங்கள் காண்கின்ற எந்த ஒரு நிறத்தையும் காப்ட்சர்  செய்து அந்த நிறத்தின் எண்னை பெறலாம் (color code). இதற்க்கு சிஸ்டம் டிரேயில் உள்ள சிவப்பு நிற ஐகனை கிளிக் செய்து கலர் க்ராபெரில் உள்ள இங்க் பில்லர் ட்ரோப்பறை நீங்கள் விரும்பிய நிறத்தின் மீது ட்ராக் செய்வதன் மூலம் அதன் நிற ஹெக்ஸ் எண்களை காணலாம். RGB எண்களையும் காணலாம்.


3. அகால உயரங்களை அளக்க

வலைதளத்தில் படிவங்களுக்கு சரியான  அகால உயரங்களை அளவீட இதில் வசதி உள்ளது. இதன் மூலம் சரியான அளவீடுகளை தரலாம். இந்த வசதியை பெற கீபோர்டில் விண்டோஸ் கீ மற்றும் சி கீயை ஒரு சேர அழுத்தினால் போதுமானது
    மீசெர் டூல்ஸ் மேலும் பல சிறப்பு தன்மைகளை கொண்டுள்ளது. வலைமனை வடிவமைப்பாளர்கள் அனைவருக்கும் இது மிக முக்கியமான கருவியாக செயல்படுகிறது.

(நண்பர்களே, உங்கள் பொன்னான பின்னுட்டோம்தான் என்னை மென்மேலும் ஊக்குவிக்கும். தவறாமல் உங்கள் கருத்தை தெரிவியுங்கள். ஏதேனும் தவறுகள் இருந்தாலும் தயவு செய்து சுட்டிகாட்டவும். - ராம்)Monday, April 5, 2010

ஆபீஸ் 2010 புதுசா என்ன இருக்கு ?

விண்டோஸ் 7 இயங்கு தளத்தை வெளியிட்ட மைக்ரோசாப்டின் மற்றும் ஒரு  வெளியீடுதான் ஆபீஸ் 2010. பல புது புது யுக்திகளோடு கடந்த நவம்பர் 2009ல் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது. இதன் முழு பதிப்பு வருகின்ற ஜூன் 2010ல் வெளிவரும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில் பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் விண்டோஸ் 7 மற்றும் ஆபீஸ் 2010 தயாரிப்பில் பெருமளவு தமிழர்களையே பயன்படுத்தி இருக்கிறார்கள். காலரை உயர்ற்றி கொள்ளுங்கள்.


ஆபீஸ் 2010 புதுசா என்ன இருக்கு ?


ஆபீஸ் 2007 விட பல சிறப்பு தன்மைகள் ஆபீஸ் 2010ல் உள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவிக்கிறது

1. திரையை பதிவு செய்யும் வசதி (Built-In Screen Capture)


நாம் பொதுவா ஒரு இணையதள பக்கத்தை முழுவதுமாக ஸ்க்ரோல் பண்ணி பதிவு செய்ய மூன்றாம் தரப்பு கருவிகளையே பயன்படுத்தி வந்தோம்.  சான்றாக ஸ்நாகிட், ஸ்க்ரீன் காப்சர் ப்ரோ, ஐ கு ஸ்க்ரீன் காப்சர். ஆனால் ஆபீஸ் 2010 தொகுப்பில் அது இணைக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரீன் சாட் எடுக்க இது நல்ல கருவியாக செயல்படும்.


2. கண்ட்ரோல் பானல்

ஆபீஸ் தொகுப்புக்கு தனியாக ஒரு கண்ட்ரோல் பானல் உள்ளது, இதன் மூலம் ஆபீஸ் தொகுப்பை  உங்கள் வசதிக்கு தகுந்தவாறு மாற்றிகொள்ளலாம்.


3. பவர்பாய்ன்ட் 2010 - புதிய டெம்ப்ளேட்டுகள்

ஆபீஸ் 2010 - பவர்பாய்ன்ட் பல வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகள் உள்ளடங்கி உள்ளது,  இதன் மூலம் உங்களுக்க தேவையான  டெம்ப்ளேட் தேர்வு செய்து நீங்கள் விரும்பியவாறு வடிவமைத்துக் கொள்ளலாம்.


4. வடிவமைக்கப்பட்ட பின்புல நிறம்

ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து மென்பொருளிலும் பின்புல நிறம் மாற்றப்பட்டுள்ளது கிழே உள்ள படத்தை பார்க்கவும்


5. ப்ளாஷ் திரை (Splash screen)

ஆபீஸ் 2010 தொகுப்பில் உள்ள வோர்ட், எக்ஸ்செல் பவர்பாய்ன்ட் ப்ளாஷ் திரை முற்றிலும் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.6.  சோசியல் கனக்டர்

இது மின்னஞ்சல் / குறுஞ்செய்தி பரிமாற்றம் அடிபடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் அதிகமாக இது உபோயோகப்படும். அலுவலத்தில் பணி புரிபவர்கள் இடையே செய்தி பரிமாற்றத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.


7. புதிய திறனுடன் அவுட்லுக் 2010

அவுட்லுக் 2010ல் இப்போது அதிக கொள்ளளவு கொண்ட மின்னஞ்சல்களை சேமித்துக் கொள்ளலாம். நீங்கள் விருப்பட்டால் தற்போது தேவை இல்லாத மின்னஞ்சல்களை சுருக்கி பதிந்து கொள்ளலாம். இந்த வசதி இப்ப அவுட்லுக் 2010ல் உள்ளது


8. மேம்படுத்தப்பட்ட பவர்பாய்ன்ட் 2010

பவர்பாய்ன்ட் 2010 இப்போது நல்ல முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.  முதல் தரமான ப்ரெசென்ட்டேசன் தயாரிக்க, விரும்பிய அனிமேசன் கொடுக்க, ஸ்லைட் அனிமேசன், ஆடியோ, வீடியோ  என பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 


9. தொழில்நுட்ப புரட்சியில் எக்ஸ்செல் 2010

இதில் இல்லாத அம்சங்களே இல்லை என சொல்ல கூடிய அளவுக்கு அனைத்து வகையான சிறப்புயல்புகளும் இப்போது எக்ஸ்செல் 2010ல் உள்ளது. டேட்டாவை கையாள்வதில் இனி எக்ஸ்செல்க்கு நிகர் எக்ஸ்செல் தான்.


10. புதிய வசதிகளோடு வோர்ட் 2010

வோர்ட் 2010ல் பற்பல புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. படங்களை கையாளும் போது பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் பல விசுவல் எபக்ட் இதில் உள்ளது. பெரிய கோப்புகளை கையாளும்போது எளிதாக செய்வதற்க்கான வசதிகளை கொண்டுள்ளது.

இதை தவிர மேலும் பற்பல வசதிகள் ஆபீஸ் 2010ல் இருக்கின்றது. சான்றாக இதில் வலைமனையில் திறம்பட பணிபுரிய பல வசதிகள் உள்ளது மற்றும் இதன்மூலம் கைபேசியை கையாளலாம்.

ஆபீஸ் 2010 ஆறு வகைகளில் வெளிவர இருக்கிறது அவை ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு, மாணவர்கள் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு, பிசினெஸ் பதிப்பு, ஸ்டாண்டர்ட் பதிப்பு, ப்ரோபோசனால் மற்றும் ப்ரோபோசனால் பிளஸ்

ஆபீஸ் 2010 Home தொகுப்பினை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்        

ஆபீஸ் 2010 பயன்படுத்த:  500Mz ப்ரோசெசார் அல்லது அதற்க்கு மேல், ராம் 250MB
அல்லது அதற்க்கு மேல், வன்தட்டில் 1.5 GB இடம் அல்லது அதற்க்கு மேல், மற்றும் விண்டோஸ் XP SP3 அல்லது விஸ்டா  அல்லது விண்டோஸ் 7    மேலதிக தகவலுக்கு இங்கே சொடுக்கவும்.  

(நண்பர்களே, உங்கள் பொன்னான பின்னுட்டோம்தான் என்னை மென்மேலும் ஊக்குவிக்கும். தவறாமல் உங்கள் கருத்தை தெரிவியுங்கள். ஏதேனும் தவறுகள் இருந்தாலும் தயவு செய்து சுட்டிகாட்டவும். - ராம்)Saturday, April 3, 2010

சிறந்த இணையதளம் வடிவமைக்க உதவும் டாப்ஸ்டைல் பதிப்பு 4

ஒரு சிறந்த வலை தளம் எப்படி இருக்க வேண்டும் ?

இன்றைக்கு உள்ள அனைத்து  உலாவிகளிலும் (Browsers)  மற்றும் அனைத்து பதிப்புகளிலும் (Versions) ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டதாக இருக்க வேண்டும்.

இன்றைய காலகட்டங்களில் அதிகமாக உபயோகப்படுகின்ற உலாவிகள் என்று எடுத்துக்கொண்டால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோசில்லா பைர்பாக்ஸ், கூகிள் குரோம், ஆப்பிள் சபாரி, ஒபேரா போன்றவை ஆகும். நெட்ஸ்கேப் நேவிகேட்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுபிக்க படவில்லை. மேலும் சில உலாவிகள் பிரபலம் அடையாமல் போய்விட்டது.டாப் ஸ்டைல்ல என்ன என்ன இருக்கு ?

இதில் HTML, XHTML, ASP, ASP.net, PHP, XML, XSLT, iWebkit, Javascript மற்றும் CSS போன்ற அணைத்து வகையான சிறப்பு அம்சங்களும் நிறைந்து உள்ளது. நீங்கள் மேற்கண்ட வெப் ப்ரோக்ராம் மொழிகளில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து உங்கள் வலைமனையை வடிவமைக்கலாம். பிரான்ட்பேஜ், விசுவல் ஸ்டுடியோ 2005 போன்ற கருவிகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது டாப்ஸ்டைல் ஒரு சில விசயங்களில் சிறந்து விளங்குகிறேது. சான்றாக CSS ல் நீங்கள் எழுதிய கிளாஸ் அனைத்தும் HTML எடிட்டர் வீவ்ல் டிஸ்ப்ளே ஆகும்.டாப் ஸ்டைல்4 - எங்கே தரவிறக்கம் செய்வது ?

இது இலவச மென்பொருள் அல்ல, இது வரையறுக்கப்பட்ட டிரையல் பதிப்பில் கிடைகிறது, இதனை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

இது விண்டோஸ் 7லும் இயங்கவல்லது.
     
இதை பற்றி மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்

 Tuesday, March 30, 2010

கணணி தொழில் நுட்ப புரட்சி


 

இன்று சிறிய மளிகை கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்திலும் கணணி முக்கிய பங்கு வகிக்கின்றது. நான் 1997 ம் ஆண்டு கணணி கற்கும்போது தாஸ், பேசிக், டீபேஸ், வோர்ட் ஸ்டார்,   லோட்டஸ் போன்றவைகளை கற்கும் போது எனக்கு பெரிதாக தெரிந்தது.  அப்புறம் பாக்ஸ்ப்ரோ, விண்டோஸ் ,  விண்டோஸ் 95 பல்முனை (Multitasking System) மைக்ரோ சாப்ட்  ஆபீஸ் தொகுப்பு, சி, சி++ போன்றவை வந்து ஆதிக்கத்தை கைப்பற்றியது. ஆனால் இப்போது மேற்கண்ட அனைத்தும் (ஒரு சில தவிர) கிட்டதட்ட மறைந்தே விட்டது.

அதனால் நாம் இன்றைய தொழில்நுட்பம் மற்றும் நாளை வர இருக்கிற  கணணி தொழில்நுட்பங்களை இனி வரும் பதிவுகளில் விரிவாக  பார்க்கலாம் .....

PDF View