Saturday, April 3, 2010

சிறந்த இணையதளம் வடிவமைக்க உதவும் டாப்ஸ்டைல் பதிப்பு 4

ஒரு சிறந்த வலை தளம் எப்படி இருக்க வேண்டும் ?

இன்றைக்கு உள்ள அனைத்து  உலாவிகளிலும் (Browsers)  மற்றும் அனைத்து பதிப்புகளிலும் (Versions) ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டதாக இருக்க வேண்டும்.

இன்றைய காலகட்டங்களில் அதிகமாக உபயோகப்படுகின்ற உலாவிகள் என்று எடுத்துக்கொண்டால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோசில்லா பைர்பாக்ஸ், கூகிள் குரோம், ஆப்பிள் சபாரி, ஒபேரா போன்றவை ஆகும். நெட்ஸ்கேப் நேவிகேட்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுபிக்க படவில்லை. மேலும் சில உலாவிகள் பிரபலம் அடையாமல் போய்விட்டது.



டாப் ஸ்டைல்ல என்ன என்ன இருக்கு ?

இதில் HTML, XHTML, ASP, ASP.net, PHP, XML, XSLT, iWebkit, Javascript மற்றும் CSS போன்ற அணைத்து வகையான சிறப்பு அம்சங்களும் நிறைந்து உள்ளது. நீங்கள் மேற்கண்ட வெப் ப்ரோக்ராம் மொழிகளில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து உங்கள் வலைமனையை வடிவமைக்கலாம். பிரான்ட்பேஜ், விசுவல் ஸ்டுடியோ 2005 போன்ற கருவிகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது டாப்ஸ்டைல் ஒரு சில விசயங்களில் சிறந்து விளங்குகிறேது. சான்றாக CSS ல் நீங்கள் எழுதிய கிளாஸ் அனைத்தும் HTML எடிட்டர் வீவ்ல் டிஸ்ப்ளே ஆகும்.



டாப் ஸ்டைல்4 - எங்கே தரவிறக்கம் செய்வது ?

இது இலவச மென்பொருள் அல்ல, இது வரையறுக்கப்பட்ட டிரையல் பதிப்பில் கிடைகிறது, இதனை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

இது விண்டோஸ் 7லும் இயங்கவல்லது.
     
இதை பற்றி மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்

 



2 comments:

மன்னார்குடி said...

உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள்.

RamGP said...

வருகைக்கு நன்றி பாலாஜி !